ஆப்பிள் நிறுவனத்தின் "விஷன் ப்ரோ ஹெட்செட்" அறிமுகம்... இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.89 லட்சம் என தகவல்
ஆப்பிள் நிறுவனத்தின் மெடாவர்ஸ் தொழில்நுட்பத்திலான ஆக்மெண்டெட் ரியாலிட்டி ஹெட்செட் "விஷன் ப்ரோ" அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கியூபர்டினோவில் நடைபெற்ற டெவலப்பர்ஸ் கான்பிரன்ஸில் இந்த ஹெட்செட் அறிமுகப்படுத்தப்பட்டது. இது மெய்நிகர் தொழில்நுட்பத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்துவதாக இதனை பயன்படுத்தியவர்கள் தெரிவித்தனர்.
விஷன் ப்ரோ மாடல் பிரத்யேக கண்ட்ரோலர் இன்றி சென்சார்கள், கேமராக்களை கொண்டு வாய்ஸ் இன்புட் மற்றும் செய்கை மொழியிலேயே இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
100க்கும் மேற்பட்ட கேம்களை இதன்மூலம் விளையாட முடியும் என்றும், இந்த ஹெட்செட்டின் விலை இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 2 லட்சத்து 89 ஆயிரம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அடுத்த ஆண்டு தொடக்கத்திலும் மற்ற நாடுகளில் அடுத்த ஆண்டு இறுதியிலும் விஷன்ப்ரோ விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments